உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

June 16, 2026

Hot News

IMG-20260614-WA0054
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் நிழலில்: இலங்கையின் நீதியும் அதிகாரமும் - தொடரும் கேள்விகளும்.!!!
IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!

Share :

ஏறாவூரில் சிறுவனை கடத்தி கொடூரமாக தாக்கிய சம்பவம்: இருவர் கைது – மற்றவர்களை தேடி பொலிஸார் தீவிர வலைவீச்சு.!!!

ஏறாவூரில் சிறுவன் ஒருவரை கடத்திச் சென்று குழுவொன்று கொடூரமாக தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளின் படி, தனிப்பட்ட பகைமையின் காரணமாக குறித்த சிறுவன் கடத்தப்பட்டு தாக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான சிறுவன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இளைஞர்களில் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், தப்பிச் சென்றுள்ள ஏனைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 887072

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time