உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

“உங்களுக்கு ஒரு வீடு – நாட்டுக்கு ஒரு எதிர்காலம்” தேசிய வீடமைப்பு உதவித் திட்டத்தின் கீழ்; வீட்டுத்திட்ட நிர்மாணப் பணிகள் ஆரம்பம்.!!!

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் (NHDA) நடைமுறைப்படுத்தப்படும் “உங்களுக்கு ஒரு வீடு – நாட்டுக்கு ஒரு எதிர்காலம்” தேசிய வீடமைப்பு உதவித் திட்டத்தின் கீழ், கற்பிட்டி பிரதேச செயலகப் பிரிவில் அமையவுள்ள இரண்டாவது வீட்டிற்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை (18) நுரைச்சோலை கிராம சேவையாளர் பிரிவில் கற்பிட்டி பிரதேச செயலாளர் பீ.ஜீ.எஸ்.என் பிரியதர்ஷினி தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் உதவி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், சம்பந்தப்பட்ட பிரிவின் கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமூக சேவைகள் உத்தியோகத்தர் மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் உட்பட பல முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த வீடமைப்புத் திட்டம் நாடு முழுவதும் உள்ள குடும்பங்களின் வீடமைப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட இரண்டு பயனாளிகளின் புதிய வீடுகளின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1076302

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time