உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

பௌர்ணமி தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை: பெண் கைது.!!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யூனியன் காலனி பகுதியில் பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று (30) இரவு போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் வை. விஜயராஜா தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த வீட்டை முற்றுகையிட்டு சோதனை மேற்கொண்டனர்.

இதன்போது, சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படும் 42 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மேலும், சோதனையின் போது 72 பியர் டின்கள் மற்றும் 25 கால் போத்தல் மதுபானங்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066826

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time