உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

பணப்பையை திருடிய பெண் பொலிசாரினால் கைது; 20 ஆயிரம் ரூபாய் பணம்மும் மீட்பு.!!!

(ஜே.கே)

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டூர் ஆலய திருவிழாவின்போது பெணொருவரின் பணப்பையை திருடி அதனுள்ளிருந்த 20,000 ரூபாய் பணத்தை கொள்ளையிட்ட 36 வயது பெண் ஒருவரை வெல்லாவெளி பொலிசார் கைது செய்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஐ பி ரஜிக்காந்தன் தெரிவித்தார்

தற்போது நடைபெற்று வரும் மண்டூர் முருகன் ஆலய உற்சவத்தின் போது வழிபாடுகளுக்காக வந்திருந்த குறித்த பெண்ணின் பணப்பையே இவ்வாறு திருடப்பட்டுள்ளது

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்திச்சகரின் வழிகாட்டலில் வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் இன்ஸ்பெக்டர் எச்.டி. பிரசாத் டி சில்வாவின் வழிகாட்டலில் வெல்லாவெளி குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பு அதிகாரி ஐ.பி. ரஜிக்காந்தன் தலைமையிலான பொலிஸ் குழுவினரே குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்

பொலிஸ் உத்தியோகஸ்தரான அனுஸ்க மற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தரான சஸ்னி ஆகியோர் மேற்படி பெண்ணை கைது செய்த குழுவில் அடங்கி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

கைது செய்யப்பட்ட பெண் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதுடன் மேல்திக விசாரணைகளை வெல்லாவெளி பொலிசார் மேற்கொண்டுள்ளனர்

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 810187

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time