உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையான யோஷித ராஜபக்ச கைது.!!!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனும் முன்னாள் கடற்படை அதிகாரியுமான யோஷித ராஜபக்ச இன்று (17) லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணை ஒன்றுடன் தொடர்புடையதாக வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தபோது, அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரை நேற்று (16) ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும், சட்டரீதியான காரணங்களால் தமக்கு முன்னிலையாக முடியாது எனக் குறிப்பிட்டு, ஆணைக்குழுவுக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து, இன்று ஆணைக்குழுவில் ஆஜரான யோஷித ராஜபக்சவை விசாரணை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முன்னெடுத்து வருகிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066863

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time