500 போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது; பொலிஸார் தீவிர விசாரணை.!!!
சாய்ந்தமருது பிரதேசத்தில் சுமார் 500 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி பிரகலாதன் தலைமையில் அமைக்கப்பட்ட மூவர் அடங்கிய பொலிஸ் குழுவினர், சந்தேகநபரின் வீட்டைச் சோதனையிட்டனர்.
இதன்போது, விற்பனை மற்றும் பயன்பாட்டிற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் சுமார் 500 போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞரும் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.



