உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை.!!!

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான பிரதான வழக்கின் தீர்ப்பு இன்று (22) கொழும்பு நிரந்தர உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய Trial-at-Bar அமர்வினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

24 பிரதிவாதிகளுக்கு எதிராக 23,270 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் 15 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஏனைய 9 பிரதிவாதிகளும் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு கொழும்பு உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய Trial-at-Bar அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், நீதிபதிகள் நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஷங்க ஆகியோர் அமர்வில் இடம்பெற்றிருந்தனர்.

சுமார் ஐந்து ஆண்டுகளாக நீடித்த நீண்டகால விசாரணை, கடந்த ஓகஸ்ட் 24ஆம் திகதி நிறைவடைந்திருந்தது. விசாரணையின்போது அரச தரப்பில் 2,309 சாட்சிகள் சாட்சியமளித்திருந்தனர்.

குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள 15 பேருக்கான தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படவுள்ளன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215615

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time