ஷிரந்தி ராஜபக்ஷ இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் கைது.!!!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் இன்று (07) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
அரச வங்கி ஒன்றிலிருந்து 10 மில்லியன் ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டு, அதனைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில், பொதுச் சொத்துச் சட்டம் மற்றும் ஊழல் தொடர்பான சட்ட விதிகளின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பில் ஷிரந்தி ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இன்று காலை இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது தங்கியிருக்கும் கிருலப்பனை இல்லத்தில் வைத்து ஷிரந்தி ராஜபக்ஷவை ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.