உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

இந்த மாத இறுதி வரை எரிபொருள் விலை அதிகரிக்காது; பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் அறிவிப்பு.!!!

இந்த மாத இறுதி வரை தற்போதைய எரிபொருள் விலையை எந்தவித அதிகரிப்புமின்றி தொடர்ந்து பேண முடியும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

இன்று (06) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அடுத்த மூன்று மாதங்களில் பாரிய பிரச்சினைகள் எதுவும் ஏற்படாத பட்சத்தில், தற்போதைய எரிபொருள் விலை மற்றும் விநியோக நிலைமையை தொடர்ந்து பேண முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், ஏனைய எரிபொருள் நிறுவனங்கள் தமது விநியோகத்தை குறைப்பதன் காரணமாக நாட்டின் சில பகுதிகளில் தற்காலிக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலைமை ஏற்படக்கூடிய சுமார் 62 பகுதிகள் மூன்று வாரங்களுக்கு முன்னரே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்தப் பகுதிகளுக்கு மேலதிக எரிபொருளை விநியோகிப்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இணக்கம் எட்டப்பட்டுள்ளதாகவும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாட்டில் எரிபொருள் தொடர்பில் பாரிய நெருக்கடி ஏற்படுவதற்கான காரணம் எதுவும் தற்போது இல்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் தேவையற்ற பதற்றமடைய வேண்டாம் எனவும், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தேவையின்றி நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் எனவும் டி.ஜே. ராஜகருணா பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1214787

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time