உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

160ஆவது பொலிஸ் தினம்; பொலிஸ் சேவையை கௌரவமான துறையாக மாற்ற ஜனாதிபதி உறுதி.!!!

இலங்கை பொலிஸ் சேவையை மிகவும் கௌரவமான சேவையாக மாற்றுவதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

திம்பிரிகஸ்யாய களப் படைத் தலைமையகத்தில் நேற்று (03) பிற்பகல் நடைபெற்ற 160ஆவது பொலிஸ் தின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் அதிகாரிகளுக்கான முறையான பதவி உயர்வு முறைமையை அறிமுகப்படுத்துதல், அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் புதிய சீருடையை வழங்குதல் மற்றும் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் ஆபத்துக் கொடுப்பனவு வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இலங்கை பொலிஸில் நிலவும் மனிதவளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 10,000 புதிய பொலிஸ் அதிகாரிகளை இணைத்துக்கொள்ள ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகளவிலான போதைப்பொருள் சுற்றிவளைப்புகள் மற்றும் கைதுகளை மேற்கொண்டமைக்காக பொலிஸாரை பாராட்டிய ஜனாதிபதி, போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களை ஒழிப்பதே பொலிஸாரின் முக்கிய பொறுப்பு எனவும் தெரிவித்தார்.

மேலும், வெளிநாடுகளில் தலைமறைவாகியிருந்த 74 ஆயுதமேந்திய குற்றவாளிகள், சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பொலிஸ் துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் சுமார் 700 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 200 சிங்கிள் கெப் வாகனங்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், நவீன பொலிஸ் தலைமையகம், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கான புதிய கட்டடம், நவீன பொலிஸ் வைத்தியசாலை மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான உத்தியோகபூர்வ குடியிருப்புகளை அமைத்தல் உள்ளிட்ட திட்டங்களுக்கு எதிர்வரும் வரவு-செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான தகவல் பரிமாற்றத்தை வலுப்படுத்தும் நோக்கில் Sri Lanka Police Mobile App அறிமுகப்படுத்தப்பட்டதுடன், நவீனமயப்படுத்தப்பட்ட பொலிஸ் இணையத்தளமும் இதன்போது திறந்து வைக்கப்பட்டது.

160ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் உறையும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

மேலும், 2026 ஜனவரி 01 முதல் அமுலுக்கு வரும் வகையில், நீண்டகால சேவை அடிப்படையில் பிரதான பொலிஸ் பரிசோதகர் பதவிக்குக் கீழுள்ள 1,489 பொலிஸ் அதிகாரிகளுக்கும், பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த 153 அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்குவதன் அடையாளமாக ஜனாதிபதியினால் பதவி உயர்வு கடிதங்கள் வழங்கப்பட்டன.

“பொலிஸின் கௌரவத்தையும் மக்கள் நம்பிக்கையையும் பாதுகாத்து, புதிய மற்றும் நட்புறவான பொலிஸ் சேவையை உருவாக்க அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்” என ஜனாதிபதி வலியுறுத்தினார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215579

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time