உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

2026 புலமைப்பரிசில் பரீட்சையில் சிங்கள மொழிக்கு 193; தமிழில் 188 அதிகூடிய புள்ளி.!!!

2026ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின்படி, சிங்கள மொழி மூலம் பெறப்பட்ட அதிகூடிய புள்ளியாக 193 புள்ளிகள் பதிவாகியுள்ளன. இந்தப் புள்ளி குருநாகல் மாவட்டத்தில் பெறப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழ் மொழி மூலம் பெறப்பட்ட அதிகூடிய புள்ளியாக 188 புள்ளிகள் பதிவாகியுள்ளதுடன், அந்தப் புள்ளி யாழ்ப்பாண மாவட்டத்தில் பெறப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

2026 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பாக இன்று (02) பிற்பகல் பரீட்சைத் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இம்முறை பரீட்சையில் 1,018 விசேட தேவையுடைய மாணவர்கள் தோற்றியுள்ளனர்.

அத்துடன், இம்முறை அதிகூடிய வெட்டுப்புள்ளி 139 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், பெறுபேறுகளின்படி 56,000 மாணவர்கள் வெட்டுப்புள்ளியை விட அதிகமான புள்ளிகளைப் பெற்றுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.

கடந்த ஆகஸ்ட் 09ஆம் திகதி நடைபெற்ற இப்பரீட்சைக்கு மொத்தம் 294,132 விண்ணப்பதாரர்கள் பதிவு செய்திருந்த நிலையில், அவர்களில் 289,867 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215575

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time