உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

கடலில் வழிதவறி மணல்திட்டில் தவித்த 8 பேர்; கடற்படையினர் தலையீட்டில் மீட்பு.!!!

தலைமன்னார் கடற்பரப்பில் மணல்திட்டொன்றில் வழிதவறித் தவித்துக் கொண்டிருந்த 8 பேர் கொண்ட குழுவொன்றை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

குறித்த கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின்போது, மணல்திட்டொன்றில் சிக்கித் தவித்த நிலையில் இக்குழுவினர் அவதானிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, அவர்களை பாதுகாப்பாக மீட்ட கடற்படையினர், இவர்கள் தென்னிந்தியாவிலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு வந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மீட்கப்பட்டவர்களில் ஒரு ஆண், நான்கு பெண்கள் மற்றும் 2 முதல் 14 வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகள் அடங்குவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட அவர்களுக்கு தேவையான குடிநீர், உணவு மற்றும் தற்காலிக தங்குமிட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆரம்பக்கட்ட விசாரணைகளின்போது, இவர்கள் இந்தியாவின் அனையூர் மற்றும் ஒக்கூர் அகதி முகாம்களில் இருந்து இராமேஸ்வரம் ஊடாக இலங்கைக்கு வந்துள்ளதாகவும், முன்னர் இந்தியாவில் அகதி அந்தஸ்து கோரியிருந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

மீட்கப்பட்டவர்களை அடுத்தகட்ட சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்காக உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215581

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time