உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

தமிழ் மொழி ஊடகவியலாளர்களை மையப்படுத்தி அரசாங்க தகவல் திணைக்களத்தின் முக்கிய செயலமர்வு.!!!

தமிழ் மொழியில் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கான விசேட செயலமர்வு அரசாங்க தகவல் திணைக்களத்தினால் இன்று (03) வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது.

அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே. பண்டாரவின் வழிகாட்டலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இச்செயலமர்வு, அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

திணைக்களத்தின் மேலதிக தகவல் பணிப்பாளர் நாயகம் வை. பரன்தாமன் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில், விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.பி.எம். பைரூஸ் வளவாளராகக் கலந்துகொண்டு, “செய்தி அறைகளில் செயற்கை நுண்ணறிவின் (AI) பயன்பாடு” என்ற தொனிப்பொருளில் விரிவுரையாற்றினார்.

இதன்போது, செய்தி தயாரிப்பு மற்றும் செய்தி அறை செயற்பாடுகளில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு, அதன் வாய்ப்புகள் மற்றும் ஊடகத்துறையில் AI தொழில்நுட்பத்தை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது.

இச்செயலமர்வில் அரசாங்க தகவல் பணிப்பாளர் உதவிப் பணிப்பாளர் எல்.பி. திலகரத்ன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215577

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time