உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

நாட்டின் பொருளாதார மாற்றத்திற்கு புதிய அத்தியாயம்; தேசிய வணிக வசதியளித்தல் மையம் திறப்பு.!!!

முதலீடுகள் மற்றும் கைத்தொழில்துறையுடன் தொடர்புடைய அரச நிறுவனங்களுக்கு இடையில் காணப்படும் நிர்வாக மற்றும் ஒழுங்குமுறை தடைகளை நீக்கி, வர்த்தக நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் நோக்கில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தேசிய வணிக வசதியளித்தல் மையம் (NBFC) இன்று (22) கொழும்பில் திறந்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் எண்ணக்கருவுக்கு அமைய ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இந்த மையம், கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, தொழில் அமைச்சர் மற்றும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

“ViYASA” தேசிய வணிக வசதியளித்தல் மையம், கொழும்பு 07, ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தை, இலக்கம் C-80 கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் சீவலி அருக்கொட செயற்படுகிறார்.

இதனுடன் இணைந்ததாக nbfc.presidentsoffice.gov.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளமும் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

முதலீட்டாளர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு

நிகழ்வில் உரையாற்றிய கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்முயற்சியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதற்கு இந்த மையம் முக்கிய பங்காற்றும் என தெரிவித்தார்.

காணி, நிதி வசதிகள் மற்றும் சுங்க நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் முதலீட்டாளர்கள் சிக்கல்களை எதிர்கொள்வதாகவும், குறிப்பாக காணி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தாமதம் ஏற்படுவதால் முதலீட்டாளர்கள் மாற்று நாடுகளை நோக்கிச் செல்லும் நிலை காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் வரிகளை செலுத்துவதற்கு தயாராக உள்ள போதிலும், அரச நடைமுறைகளை எளிமைப்படுத்துவதிலேயே முக்கிய சவால் காணப்படுவதாகவும், அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு புதிய மையம் பலமாக அமையும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பொருளாதார மாற்றத்தில் முக்கிய தூண்

தொழில் அமைச்சர் மற்றும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ உரையாற்றுகையில், நாட்டின் பொருளாதார அபிவிருத்தி தற்போதைய மாற்றச் செயற்பாட்டின் முக்கிய தூணாக அமைந்துள்ளதாக தெரிவித்தார்.

முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், எதிர்காலத்தில் மேலும் பல சவால்களை வெற்றிகொள்ள வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அந்நியச் செலாவணி, ஏற்றுமதி, இறக்குமதி வருமானம் மற்றும் நிதித்துறை தொடர்பான உலகளாவிய மாற்றங்களையும் கருத்திற்கொண்டு அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

“இது சாதாரண One-Stop Shop அல்ல”

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நாட்டின் முக்கிய தேவையொன்றை நிறைவேற்றும் வகையில் தேசிய வணிக வசதியளித்தல் மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்களை முன்னேற்றுவதுடன், உள்நாட்டு சந்தையின் வரம்புகளை கருத்திற்கொண்டு ஏற்றுமதித் துறையிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த மையம் சாதாரண One-Stop Shop ஆக மாத்திரம் செயற்படாது என தெரிவித்த அவர், பல அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்களை ஒருங்கிணைத்து தொழில்முயற்சியாளர்களின் பிரச்சினைகளுக்கு இலகுவாகத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் அதன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டார்.

வீட்டிலிருந்தே பிரச்சினைகளை முன்வைக்கலாம்

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் சீவலி அருக்கொட தெரிவிக்கையில், தொழில்முனைவோர் தங்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அலுவலகத்திற்கு நேரடியாக வர வேண்டிய அவசியமில்லை என தெரிவித்தார்.

வீட்டிலிருந்தபடியே பிரச்சினை தொடர்பான தகவல்கள் மற்றும் உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க முடியும் எனவும், அதன் பின்னர் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மையம் மேற்கொள்ளும் எனவும் அவர் கூறினார்.

சட்ட அல்லது கொள்கை ரீதியாக உடனடியாகத் தீர்க்க முடியாத பிரச்சினைகள் காணப்பட்டால், தேசிய வணிக வசதியளித்தல் மையத்தின் தேசிய செயற்பாட்டுக் குழு ஊடாக அரசாங்கத்துக்கு உரிய பரிந்துரைகள் முன்வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

புதிய வர்த்தகங்கள் உருவாகவும், ஏற்கனவே உள்ள வர்த்தகங்களை விரிவுபடுத்தவும் தேவையான வசதிகளை ஏற்படுத்துவதே மையத்தின் பிரதான நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

“பல வருடக் கனவு நனவாகியுள்ளது”

KIK வணிகக் குழுமத்தின் தலைவர் லலித் கஹட்டபிட்டிய, தேசிய வணிக வசதியளித்தல் மையம் உருவாக்கப்பட்டிருப்பது பல வருடங்களாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு முயற்சி என தெரிவித்தார்.

இவ்வாறான நிறுவனமொன்றை உருவாக்கியமைக்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த அவர், வர்த்தக சமூகத்தினர் அனைவரும் இந்த மையத்தின் சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, மேல் மாகாண ஆளுநர் ஹனீஃப் யூசுஃப், மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச நிறுவனங்களின் தலைவர்கள், இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பிரதிநிதிகள் மற்றும் வர்த்தக சமூகத்தினர் பலரும் கலந்துகொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215615

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time