முச்சக்கர வண்டி ஓட்டுநர் தொழிலுக்கு வயது கட்டுப்பாடு; அரசின் புதிய திட்டம்.!!!
முச்சக்கர வண்டி செலுத்துவதற்கான குறைந்தபட்ச வயதெல்லையை 40 ஆக உயர்த்த எதிர்பார்ப்பதாக தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார்.
பாடசாலைக் கல்வியை முடித்த உடனேயே இளைஞர்கள் முச்சக்கர வண்டி செலுத்தும் தொழிலில் ஈடுபடுவதைத் தடுக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் எதிர்காலம் பிள்ளைகளின் கைகளிலேயே தங்கியுள்ளதாக சுட்டிக்காட்டிய பிரதி அமைச்சர், அபிவிருத்தியடைந்த மனித வளத்தை உருவாக்குவதன் மூலமே இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற முடியும் எனத் தெரிவித்தார்.
இதற்கமைய, மனித வள மேம்பாட்டிற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருவதுடன், கல்வித்துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் புதிய கல்விச் சீர்திருத்தங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
எதிர்காலத்தில் முச்சக்கர வண்டி செலுத்துவதற்கான வயதெல்லையை 40 ஆக உயர்த்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும், பாடசாலைக் கல்வியை நிறைவு செய்த உடனேயே முச்சக்கர வண்டியை எடுத்துக்கொண்டு வீதிக்கு வர முடியாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே மேலும் தெரிவித்துள்ளார்.