உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

எயார்பஸ் நிதி முறைகேடு வழக்கு: நாமல் ராஜபக்ஷவுக்கு நீதிமன்றம் புதிய உத்தரவு.!!!

• எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியல் – பிணை தொடர்பான உத்தரவும் அன்றைய தினம்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக எயார்பஸ் வானூர்திகளை கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடு மற்றும் நிதித்தூய்தாக்கல் சம்பவம் தொடர்பில் நான்காவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (16) உத்தரவிட்டார்.

அதேவேளை, சந்தேகநபருக்கு பிணை வழங்குவது தொடர்பான உத்தரவு எதிர்வரும் 23ஆம் திகதி வழங்கப்படும் எனவும் நீதவான் அறிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த பின்னர் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

நீதிமன்றில் விடயங்களை முன்வைத்த பிரதி மன்றாடியார் நாயகம் ஜனக பண்டார, குறித்த சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நான்காவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அதன் அடிப்படையில் குற்றச்சாட்டுகளை தாமதமின்றி தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் நீதிமன்றில் தெரிவித்தார்.

இதேவேளை, விசாரணை நடவடிக்கைகளுக்காக எயார்பஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் பல தடவைகள் இலங்கைக்கு வருகை தந்து வாக்குமூலங்களை வழங்கியுள்ளதாகவும் பிரதி மன்றாடியார் நாயகம் ஜனக பண்டார மேலும் சுட்டிக்காட்டினார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215602

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time