உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

ஜனாதிபதி அநுரவிடம் பொதுமன்னிப்பு கோரிக்கை; ஞானசார தேரருக்காக கையொப்பம் சேகரிப்பு.!!!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு புதிய ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி கையொப்பம் சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2019ஆம் ஆண்டு ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு செல்லுபடியாகாது என உச்ச நீதிமன்றம் கடந்த செப்டெம்பர் 10ஆம் திகதி தீர்ப்பளித்தது.

இதனையடுத்து, ஞானசார தேரரின் எஞ்சிய சிறைத்தண்டனையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து நிலைமை தொடர்ந்தும் கவனத்தில் உள்ளது.

இந்நிலையில், ஞானசார தேரர் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் புதிய ஜனாதிபதி பொதுமன்னிப்பைப் பெற்றுக்கொள்வதற்கான கோரிக்கையை முன்வைத்துள்ளார். இதற்காக மூத்த பௌத்த பிக்குகள் ஜனாதிபதியிடம் தமக்காக கோரிக்கை விடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தப் பின்னணியில், அவருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி கையொப்பங்களைச் சேகரிக்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215468

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time