உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

கலை, கலாச்சாரம் வளமான நாட்டை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன – பிரதமர்.!!!

கலை மற்றும் கலாச்சாரம் மக்களின் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும் மகிழ்ச்சிகரமாகவும் மாற்றுவதுடன், வளமான நாட்டையும் அழகான வாழ்க்கையையும் உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

நாட்டின் மரபுரிமைகளை அறிந்து அவற்றைப் பாதுகாப்பதுடன், அவற்றை இன்றைய காலத்திற்கு ஏற்ற வகையில் வாழ்க்கையுடன் இணைத்துக்கொண்டு முன்னோக்கிச் செல்வது மிகவும் முக்கியமானது எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (12) வயம்ப ஜனகலா கேந்திரத்தில் நடைபெற்ற விசேட கல்வி மற்றும் கலாச்சார வர்த்தகக் கண்காட்சி மற்றும் கலைவிழாவின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சத்கொரளைக் கலைப் பாரம்பரியத்தை மறுமலர்ச்சியடையச் செய்து, கலை மற்றும் கலாச்சார ரீதியாக வலுவூட்டப்பட்ட சமூகத்தை உருவாக்கும் நோக்கில், வயம்ப ஜனகலா மன்றமும் சியபத கலைச் சங்கமும் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

கலை மற்றும் கலாச்சாரத்தின் ஊடாக சமூகத்தின் படைப்பாற்றலை மேம்படுத்துவதுடன், நாட்டின் பாரம்பரியங்களை எதிர்கால தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்வதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215596

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time