அஸ்வெசும செப்டம்பர் மாத கொடுப்பனவு இன்று கணக்குகளில் வரவு.!!!
• செப்டம்பர் 16 முதல் வங்கிக் கணக்குகள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.
அஸ்வெசும திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளர்களுக்கான 2026 செப்டம்பர் மாத கொடுப்பனவு, இன்று (12) அவர்களது அஸ்வெசும கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த கொடுப்பனவை எதிர்வரும் செப்டம்பர் 16ஆம் திகதி முதல் தங்களது வங்கிக் கணக்குகள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மிகவும் வறுமையானோர் (Very Poor) மற்றும் வறுமையானோர் (Poor) ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த பயனாளர்களுக்கே இக்கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.
அஸ்வெசும திட்டத்தின் ஏனைய பிரிவுகளைச் சேர்ந்த பயனாளர்களுக்கான கொடுப்பனவுகள் தொடர்பான தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.