ரணிலின் பாதுகாப்பு அதிகாரி மீது தாக்குதல்; தனியார் ஊடக ஒளிப்பதிவாளர் கைது.!!!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரி மீது தாக்குதல் மேற்கொண்டதாகக் கூறப்படும் தனியார் ஊடக நிறுவனமொன்றின் ஒளிப்பதிவாளர் கொம்பனித்தெரு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (30) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியே வந்தபோது, அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த அவரது பாதுகாப்பு அதிகாரி ஒருவரை தனியார் ஊடக நிறுவனத்தின் ஒளிப்பதிவாளர் ஒருவர் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலுக்கு இலக்கான பாதுகாப்பு அதிகாரி சம்பவத்தின் பின்னர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் சுயாதீனமானதும் சுதந்திரமானதுமான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
கட்சியினால் இன்று (01) நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக குறித்த ஒளிப்பதிவாளர் கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டதுடன், பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.