உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படை அதிகாரிகள் இலங்கையில்; கடற்படை தலைமையகத்தில் சந்திப்பு.!!!

-கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்-

இலங்கையில் கல்விச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய பாதுகாப்பு நிறுவனத்தின் கர்னல் Adam Geoffrey McGuinness தலைமையிலான பிரதிநிதிகள் குழு இன்று (08) இலங்கை கடற்படை தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளது.

ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படை கட்டளை மற்றும் மூலோபாய ஆய்வு பாடநெறியைப் பயிலும் மாணவர் அதிகாரிகளையும் உள்ளடக்கிய இக்குழுவினர், கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது, பயிற்சித் துறை தொடர்பான முக்கிய விடயங்கள் குறித்து இருதரப்பினருக்கும் இடையில் சுமூகமான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

தொடர்ந்து, ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படை கட்டளை மற்றும் மூலோபாய ஆய்வு பாடநெறியைப் பயிலும் மாணவர் அதிகாரிகளுக்கு இலங்கை கடற்படையின் பங்கு மற்றும் நீரளவியல் வசதிகள் தொடர்பான விசேட விரிவுரையும் கடற்படை தலைமையகத்தில் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் Amanda Johnston உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

மேலும், இந்த உத்தியோகபூர்வ விஜயத்தை நினைவுகூரும் வகையில், கடற்படை தளபதி மற்றும் ஆஸ்திரேலிய தூதுக்குழுத் தலைவர் ஆகியோருக்கு இடையில் நினைவுப் பரிசுகளும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215587

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time