உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

சமூக ஊடகங்களில் குழந்தைகளின் படங்களை பதிவிடும்போது அவதானம் – அமைச்சு எச்சரிக்கை.!!!

சமூக ஊடகங்களில் குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பதிவிடும்போது மிகுந்த அவதானத்துடனும் பொறுப்புடனும் செயற்படுமாறு பெற்றோர் உள்ளிட்ட குழந்தைகளின் பாதுகாப்புக்கு பொறுப்பானவர்களுக்கு பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமூக ஊடகங்கள் ஊடாக வருமானம் ஈட்டும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ள நிலையில், குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் பெற்றோரின் அனுமதியுடனோ அல்லது அனுமதியின்றியோ இணையத்தில் பதிவேற்றப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

குழந்தைகளின் திறமைகளை வெளிப்படுத்துதல் அல்லது அவர்களின் அன்றாட செயற்பாடுகளை பகிர்தல் என்ற பெயரில் பதிவேற்றப்படும் காணொளிகள் மற்றும் புகைப்படங்களை தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் வர்த்தக நோக்கங்களுக்காக பயன்படுத்தும் வாய்ப்பும் காணப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், குழந்தைகளின் அன்றாட வாழ்க்கை, இருப்பிடம் மற்றும் செயற்பாடுகள் தொடர்பான தகவல்கள் காணொளிகள் மற்றும் வலைப்பதிவுகள் ஊடாக மூன்றாம் தரப்பினருக்கு தெரியவருவதன் மூலம், அவர்களின் தனிப்பட்ட பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தல்கள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இணையத்தில் பதிவேற்றப்படும் குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை அடிப்படையாகக் கொண்டு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆபாசமான போலிப் படங்கள் மற்றும் காணொளிகள் உருவாக்கப்படும் அபாயமும் இருப்பதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, குழந்தைகளை இவ்வாறான இணையவழி ஆபத்துகளில் இருந்து பாதுகாப்பதற்காக சமூக ஊடகங்களை பயன்படுத்தும் போது பெற்றோர் உள்ளிட்ட அனைவரும் மிகுந்த பொறுப்புடனும் விழிப்புடனும் செயற்பட வேண்டும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215567

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time