இலங்கை–சீனா உறவு குறித்து டில்வின் சில்வாவுடன் சீனத் தூதுவர் முக்கிய பேச்சு.!!!
இலங்கைக்கான புதிய சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பிரதான செயலாளர் டில்வின் சில்வா ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (01) பெலவத்தையில் அமைந்துள்ள JVP தலைமையகத்தில் இடம்பெற்றது.
இதன்போது, இலங்கை – சீனா இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்துதல், சீன முதலீடுகளை அதிகரித்தல் மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் கிராமப்புற மக்களின் வறுமையை ஒழிப்பதை இலக்காகக் கொண்ட “பிரஜா சக்தி” திட்டம் தொடர்பிலும் இருதரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டுள்ளனர்.


