உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

புதிய நேரத்திற்கு மாறும் கொழும்பு கோட்டை – மட்டக்களப்பு புகையிரத சேவைகள்.!!!

கொழும்பு கோட்டைக்கும் மட்டக்களப்புக்குமான புகையிரத சேவைகளின் நேரங்களில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் புதிய நேர அட்டவணைக்கமைய குறித்த புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படும் என புகையிரத திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதன்படி, கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து மாலை 3.15 மணிக்கு புறப்படும் ‘புலத்திசி’ தொடருந்து, இரவு 11.23 மணிக்கு மட்டக்களப்பு புகையிரத நிலையத்தை சென்றடையும்.

அதேபோல், மட்டக்களப்பிலிருந்து அதிகாலை 1.30 மணிக்கு புறப்படும் ‘புலத்திசி’ தொடருந்து, காலை 9.28 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை வந்தடையும்.

மேலும், மட்டக்களப்பிலிருந்து காலை 6.10 மணிக்கு புறப்படும் ‘உதயதேவி’ தொடருந்து, மாலை 3.37 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்தை சென்றடையும்.

அதே நேரத்தில், கொழும்பு கோட்டையிலிருந்து காலை 6.00 மணிக்கு புறப்படும் ‘உதயதேவி’ தொடருந்து, மாலை 3.36 மணிக்கு மட்டக்களப்பை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நேர அட்டவணைக்கமைய பயணிகள் தங்களது பயணங்களை திட்டமிடுமாறு புகையிரத திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 810802

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time