உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

டிஜிட்டல் காப்பீட்டு அட்டையை பொலிஸார் ஏற்க மறுத்தால் புகார் அளிக்கலாம்.!!!

டிஜிட்டல் காப்பீட்டு அட்டையை ஏற்க மறுக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் காப்பீட்டு அட்டைகளை பரிசோதிப்பது தொடர்பாக பொலிஸ் மா அதிபரால் வழங்கப்பட்டுள்ள உத்தரவுகள் மற்றும் வழிகாட்டுதல்களை மீறி, சாரதிகளை அசௌகரியத்திற்கு உள்ளாக்குவது கடுமையான கடமை மீறலாகும் என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.

பாதுக்க மற்றும் கம்பஹா பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த சில அதிகாரிகள் டிஜிட்டல் காப்பீட்டு அட்டைகளை ஏற்க மறுத்து பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

2026 மே 5ஆம் திகதியிடப்பட்ட மேலதிக அறிவித்தலின் பிரகாரம், காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட 14 முன்னணி காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் டிஜிட்டல் காப்பீட்டு அட்டைகளை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், 2006ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க மின்னணு பரிவர்த்தனைச் சட்டத்தின் கீழ் டிஜிட்டல் காப்பீட்டு அட்டைகளுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

காப்பீட்டை எவ்வாறு சரிபார்க்கலாம்?

சாரதியிடம் டிஜிட்டல் காப்பீட்டு அட்டை இல்லாத சந்தர்ப்பத்திலும், காப்பீடு செல்லுபடியாக உள்ளதா என்பதை பொலிஸ் அதிகாரிகள் இலவசமாக பின்வரும் முறைகளில் சரிபார்க்க முடியும்:

🔹 #1338 – காப்பீட்டு இலக்கம் அல்லது வாகன இலக்கத்தை உள்ளிட்டு தகவல்களைப் பெறலாம்.
🔹 1338 – இந்த இலக்கத்திற்கு குறுஞ்செய்தி அனுப்பலாம்.
🔹 1338 – உடனடி அழைப்பு மையத்தை தொடர்புகொள்ளலாம்.

இதற்கிடையில், நாடு முழுவதும் உள்ள 607 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் ஊடாக கீழ்நிலை அதிகாரிகளுக்கு மீண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகார் அளிக்கலாம்

பொலிஸ் அதிகாரி ஒருவர் டிஜிட்டல் காப்பீட்டு அட்டையை ஏற்க மறுத்தால், அருகிலுள்ள பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் அல்லது போக்குவரத்து தலைமையகத்தின் 070 47 55 600 என்ற விசேட தொலைபேசி/வாட்ஸ்அப் இலக்கத்திற்கு புகார் அளிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

டிஜிட்டல் காப்பீட்டு அட்டையை ஏற்க மறுக்கும் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர மேலும் தெரிவித்துள்ளார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215576

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time