22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான மனுத்தாக்கல் காலக்கெடு இன்றுடன் முடிவு.!!!
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்று (31) நிறைவடைகின்றது.
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் கடந்த 18ஆம் திகதி 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் குறித்த சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
இதுவரை 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக 27 மனுக்களும், அதற்கு ஆதரவாக 3 மனுக்களும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், குறித்த சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வதற்கான இறுதி நாளாக இன்று அமைகின்றது.