உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

ஆழ்ந்த தாழமுக்கம் இலங்கையின் கிழக்கு கரையை நோக்கி நகர்வு – நாளை முதல் கனமழைக்கு வாய்ப்பு.!!!

இலங்கையின் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட குறைந்த தாழமுக்க பகுதியானது (Low Pressure Area),

இன்று தாழமுக்கமாக (Depression) வலுவடைந்துள்ளது. (07.01.2025-11.30am).

இது தற்போது பொத்துவில் (Pottuvil) இருந்து கிழக்கு-தென்கிழக்காக 700km தூரத்திலும்,

மட்டக்களப்பிலிருந்து (Batticaloa) கிழக்கு தென்கிழக்காக 720km தூரத்திலும்,

திருகோணமலையிலிருந்து (Trincomalee) கிழக்கு தென்கிழக்காக 810km தூரத்திலும்,

யாழ்ப்பாணத்தில் (Jaffna) இருந்து தென்கிழக்காக 930km தூரத்திலும்,

காரைக்காலில் (Karaikal – Puducherry) இருந்து தென்கிழக்காக 1090km தூரத்திலும்,

சென்னையில் (Chennai) இருந்து தெற்கு தென்கிழக்காக 1220km தூரத்திலும் இன்று காணப்படுகின்றது.

இது மேற்கு-வட மேற்கு திசையில் இலங்கையின் கிழக்கு கரையை நோக்கி நகர்ந்து,

அடுத்த வரும் 24 மணித்தியாலத்தில் ஒரு ஆழ்ந்த தாழமுக்கமாக (Deep Depression) மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் காரணத்தினால் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் சில பகுதிகளில் மழை கொண்ட காலநிலையானது நாளை முதல் (08ஆம் திகதி) அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 810771

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time