உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

ஈரானியக் கப்பல்கள் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்தனவா? அமைச்சர் பதில்.!!!

அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஈரானியக் கப்பல்கள் இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனவா என்பது தொடர்பில், அமைச்சரவையின் முடிவை அறிவிப்பதற்காக இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அமைச்சரவைப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸவிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

கடந்த சில நாட்களில் சுமார் 12 ஈரானியக் கப்பல்கள் இலங்கையின் அனுமதியின்றி கடல் எல்லைக்குள் நுழைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன என பத்திரிகையாளர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, குறித்த விடயம் தொடர்பில் தமக்கு தகவல் இல்லை எனத் தெரிவித்ததுடன், இது குறித்து வெளிவிவகார அமைச்சு விசாரணை மேற்கொள்ளும் எனக் குறிப்பிட்டார்.

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்திருந்த போதிலும், உயிர்களைக் காப்பாற்றும் ஒரே நோக்கத்துடன் இரு தரப்பினரும் உதவிகரமான முறையில் செயற்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அத்தகைய சூழ்நிலையில், போரில் எந்தவொரு தரப்பையும் ஆதரிக்க வேண்டிய அவசியம் இலங்கைக்கு இல்லை எனவும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் சுட்டிக்காட்டினார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215573

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time