உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260628-WA0045
பற்றி எரியும் வர்த்தக நிலையங்களும்... முதலாளிமார்களின் அசட்டுப் போக்கும்.!!!
IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!

Share :

ஈரானிய மாலுமிகளை திருப்பி அனுப்ப வேண்டாம்: இலங்கைக்கு அமெரிக்கா கோரிக்கை.!!!

ஈரானிய போர்க்கப்பல் விபத்தில் மீட்கப்பட்ட மாலுமிகள் தொடர்பாக அமெரிக்கா இலங்கைக்கு முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மையில் ஈரானிய கடற்படைக்கப்பலான IRIS Dena மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின்னர் அந்தக் கப்பல் மூழ்கியதாக கூறப்படுகிறது. இதில் இருந்த சில மாலுமிகள் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், தற்போது இலங்கையின் காவலில் உள்ள IRIS Bushehr கப்பலின் ஊழியர்களையும் மீண்டும் ஈரானுக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனம் ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த மாலுமிகளை ஈரான் தனது அரசியல் மற்றும் பிரச்சார நோக்கங்களுக்காக பயன்படுத்தக்கூடும் என்பதால், அவர்களை உடனடியாக திருப்பி அனுப்புவதில் இலங்கை எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தற்போது சர்வதேச மட்டத்தில் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்து இலங்கை அரசின் நிலைப்பாடு குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 936208

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time