உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

November 4, 2026

Hot News

IMG-20261102-WA0034
தரவரிசையில் முன்னேறும் இலங்கை; மக்களின் வாழ்க்கையில் எப்போது முன்னேற்றம்?
IMG-20261026-WA0070
பேரிடர்களின் பிடியில் உலகம்: இயற்கையின் எச்சரிக்கையும் மனிதகுலத்தின் பொறுப்பும்.!!!

Share :

சந்தேகநபர்களைச் சித்திரவதை செய்து வாக்குமூலம் பெறக்கூடாது: பொலிஸ் மா அதிபர் அதிரடி அறிவுறுத்தல்.!!!

சந்தேகநபர்களைச் சித்திரவதை செய்தோ, தாக்கியோ வாக்குமூலங்களைப் பெற முயற்சிக்கக் கூடாது என அனைத்துப் பொலிஸ் அதிகாரிகளுக்கும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களைச் சந்தேகநபர்களாகவே நடத்த வேண்டும் என்பதுடன், எக்காரணம் கொண்டும் அவர்களை முன்கூட்டியே குற்றவாளிகளாகக் கருதக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, அமைச்சின் செயலாளர் டபிள்யூ.ஆர்.பி. செனவிரத்ன மற்றும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோரின் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட இணையவழிக் கலந்துரையாடலின்போதே இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

பொலிஸ் தடுப்புக் காவலில் இருந்தபோது இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளதுடன், இச்சம்பவங்களின் பின்னணியில் காணப்பட்ட குறைபாடுகள் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, சந்தேகநபர்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் முழுமையான புரிதலைக் கொண்டிருக்க வேண்டும் என்றும், சட்ட வரம்புகளுக்கு உட்பட்டே தமது கடமைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் பொலிஸ் மா அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், அரசாங்கமோ, பொதுப் பாதுகாப்பு அமைச்சோ அல்லது தானோ பொலிஸாருக்கு கைது நடவடிக்கைகள் அல்லது வழக்குத் தாக்கல் தொடர்பான எவ்வித இலக்குகளையும் நிர்ணயிக்கவில்லை எனவும் அவர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தியுள்ளார்.

அத்துடன், தாக்குதல் அல்லது சித்திரவதை மூலம் பெறப்படும் வாக்குமூலங்கள் நீதிமன்றத்தில் சட்டப்பூர்வமான சாட்சியங்களாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கைது செய்யப்படும் சந்தேகநபர்கள் தொடர்பான உரிய பதிவுகளைப் பராமரிக்கத் தவறுதல், அவர்களுக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சைகளை வழங்க வேண்டிய நிலைமை ஏற்படுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான விளக்கக்காட்சியும் இந்தக் கலந்துரையாடலில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1292527

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time