உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

8 மாகாணங்களில் மின்னணு வாகன வருமான அனுமதிப்பத்திர விநியோகம் தற்காலிக இடைநிறுத்தம்.!!!

பயனர்களுக்கு திறமையானதும் உயர்தரமானதுமான சேவையை வழங்கும் நோக்கில், மின்னணு வாகன வருமான அனுமதிப்பத்திர (eRL 2.0) தொகுதியை புதுப்பிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கமைய, 2026 செப்டெம்பர் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் செப்டெம்பர் 28ஆம் திகதி திங்கட்கிழமை வரை, நாட்டின் 8 மாகாணங்களில் மின்னணு வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக சம்பந்தப்பட்ட மாகாண சபைகள் அறிவித்துள்ளன.

இதன்படி, மத்திய மாகாணம், வடமத்திய மாகாணம், வடமேல் மாகாணம், தென் மாகாணம், கிழக்கு மாகாணம், வட மாகாணம், சப்ரகமுவ மாகாணம், ஊவா மாகாணங்களில் குறித்த சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்படும்:

குறித்த மின்னணு தொகுதி புதுப்பிக்கும் பணிகள் நிறைவடைந்ததன் பின்னர், செப்டெம்பர் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் வழமைபோன்று வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தற்காலிக சேவை இடைநிறுத்தம் காரணமாக சேவை பெறுநர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு சம்பந்தப்பட்ட மாகாண சபைகள் வருத்தம் தெரிவித்துள்ளன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215443

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time