உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

கட்டுநாயக்க விமான நிலையத்தில் டிஜிட்டல் பயணிகள் அனுமதி வசதி விரிவாக்கம்.!!!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் அனுமதி மற்றும் குடிவரவு செயல்முறைகளை மேலும் நவீனமயப்படுத்தும் வகையில், தன்னியக்க பயணிகள் அனுமதி வாயில்களின் (e-Gates) எண்ணிக்கையை 12 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ள 4 e-Gates களுக்கு மேலதிகமாக மேலும் 8 தன்னியக்க பயணிகள் வாயில்களை கொள்முதல் செய்து நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

2027ஆம் ஆண்டு e-Passport அறிமுகப்படுத்தப்படவுள்ள நிலையில், விமான நிலையத்தின் எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பயணிகள் சேவைகளை நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

இதுவரை பிரதானமாக இலங்கைப் பிரஜைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த தன்னியக்க பயணிகள் அனுமதி வசதியை, எதிர்காலத்தில் இலங்கைக்கு வருகை தரும் மற்றும் நாட்டை விட்டு வெளியேறும் வெளிநாட்டு பயணிகளுக்கும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சுற்றுலா மற்றும் வர்த்தக நடவடிக்கைகளின் வளர்ச்சியுடன் விமானப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் நிலையில், பயணிகளின் செயல்முறைகளை விரைவுபடுத்துதல், காத்திருப்பு நேரத்தை குறைத்தல் மற்றும் விமான நிலைய சேவைகளின் செயல்திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றில் e-Gates முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

e-Passport மற்றும் e-Gate வசதிகளின் விரிவாக்கம், இலங்கையின் விமான நிலைய பயணிகள் சேவைகளை டிஜிட்டல் மயப்படுத்துவதில் முக்கிய முன்னேற்றமாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215625

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time