முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அதிரடியாக கைது.!!!
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) இன்று கைது செய்துள்ளது.
விசாரணை ஒன்றுக்காக வாக்குமூலம் வழங்குவதற்கு இன்று காலை ஆணைக்குழுவில் முன்னிலையான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட பின்னர், அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொல்கொல்ல மகிந்த ராஜபக்ஷ கேட்போர் கூடத்திற்கான நாற்காலிகள் கொள்முதல் தொடர்பில் அரசாங்கத்தின் முறையான கொள்முதல் நடைமுறைகளை பின்பற்றாமல் செயற்பட்டதன் மூலம் அரசாங்கத்திற்கு ரூ. 7,973,114-க்கும் அதிகமான நிதி இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் மற்றும் வழக்கு விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.