உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது.!!!

முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 8.15 மணியளவில் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி ஆணைக்குழுவில் ஆஜரான ரவி கருணாநாயக்கவிடம் அதிகாரிகள் பல மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணைகளின் நிறைவில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தேசிய லொத்தர் சபையில் நடைமுறையில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பணியமர்த்தல் விதிமுறைகளை மீறி, ஒப்பந்த அடிப்படையில் 5 பேர் சட்டவிரோதமாக பணியமர்த்தப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

பின்னர் குறித்த ஐந்து பேரும் ரவி கருணாநாயக்கவின் தனிப்பட்ட பணியாளர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே ரவி கருணாநாயக்கவிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215569

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time