இராணுவ வெற்றி தின ஒத்திகை சம்பவம்: முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச கைது.!!!
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச இன்று (25) தலங்கம பொலிஸ் நிலையத்தில் முன்னிலையான நிலையில் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 18ஆம் திகதி நடைபெற்ற இராணுவ வெற்றி தின நிகழ்வுக்கான ஒத்திகை நடவடிக்கைகளுக்கு தடையேற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக, அவரை கடந்த சனிக்கிழமை தலங்கம பொலிஸார் ஆஜராகுமாறு அறிவித்திருந்தனர்.
எனினும், அன்றைய தினம் அவர் முன்னிலையாகாத நிலையில், இன்று தலங்கம பொலிஸ் நிலையத்தில் ஆஜரானபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.