உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

மிக் போர் விமான கொடுக்கல்வாங்கல் தொடர்பில்; முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு.!!!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (11) நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) அழைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மிக் போர் விமான கொள்முதல் கொடுக்கல்வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காகவே அவர் FCIDக்கு அழைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை, மிக் போர் விமான கொடுக்கல்வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்க நேற்று (10) முற்பகல் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியிருந்தார்.

அங்கு ஐந்து மணித்தியாலங்களுக்கும் மேலாக வாக்குமூலம் வழங்கிய பின்னர் அவர் FCID வளாகத்திலிருந்து வெளியேறியிருந்தார்.

மிக் போர் விமான கொடுக்கல்வாங்கல் தொடர்பான விசாரணைகளின் தொடர்ச்சியாகவே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215592

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time