உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜரானார் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ.!!!

முன்னாள் சபாநாயகரும் மூத்த அரசியல்வாதியுமான சமல் ராஜபக்ஷ, லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவான CIABOC முன்னிலையில் இன்று (08) காலை ஆஜராகியுள்ளார்.

Commission to Investigate Allegations of Bribery or Corruption முன்னெடுத்து வரும் விசாரணைகளின் ஒரு பகுதியாகவே சமல் ராஜபக்ஷ விசாரணைக்கு அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SriLankan Airlines நிறுவனத்திற்கான Airbus விமானக் கொள்வனவு தொடர்பில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் லஞ்சக் குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானக் கொள்வனவு நடவடிக்கை தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பில் ஏற்கனவே பல்வேறு கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சமல் ராஜபக்ஷ ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளமை அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215586

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time