உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

எரிபொருள் விலை உயர வாய்ப்பு; செப்டம்பர் இறுதியில் முடிவு – அமைச்சர் அனுர கருணாதிலக்க.!!!

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு, செப்டம்பர் மாத இறுதியில் இலங்கையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாக வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விநியோக நிறுவனங்களில் நிலவும் தட்டுப்பாடு தொடர்பாக இன்று (14) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ள போதிலும், இலங்கையின் உள்ளூர் சந்தையில் எரிபொருள் ஒப்பீட்டளவில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே, தற்போதைய சூழ்நிலையில் தொடர்ந்து செயற்படுவது சவாலாக உள்ளதாக சில தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, எதிர்காலத்தில் பொருத்தமான தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பை சமாளிப்பதற்காக பல தீர்வுகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களைப் போன்று அரசாங்கம் தலையிட்டு எரிபொருள் மானியம் வழங்குவது அல்லது எரிபொருள் விலை தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், தனியார் நிறுவனங்கள் முன்வைக்கும் யோசனைகளுடன் நுகர்வோரின் நலனையும் கருத்திற்கொண்டே இறுதி முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

ஒவ்வொரு மாத இறுதியிலும் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படும் நடைமுறைக்கு அமைய, இந்த மாத இறுதியிலும் நிலவும் சூழ்நிலைகள் மற்றும் அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கருத்திற்கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனினும், எரிபொருள் விலை உயர்வு தொடர்பில் இதுவரை எந்தவொரு இறுதி முடிவும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215599

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time