உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

மாத்தறை காணி விவகாரம்; பசில் ராஜபக்சவின் காணியை பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை.!!!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் மாத்தறை, Browns Hill பகுதியில் அமைந்துள்ள காணியை பயன்படுத்துவதைத் தற்காலிகமாகத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) மாத்தறை நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

மாத்தறை, Browns Hill, Eliyakanda Road பகுதியில் அமைந்துள்ள சுமார் ஒன்றரை ஏக்கர் காணி கொள்வனவு தொடர்பாக மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கின் ஒரு பகுதியாக இந்த விடயம் முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த காணி முன்னதாக தென்னைப் பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தப்பட்ட காணியாக இருந்ததாகவும், அதன் கொள்வனவு தொடர்பில் பசில் ராஜபக்சவுக்கு எதிராக FCID வழக்குத் தொடர்ந்துள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம், குறித்த காணி முன்னதாக ஜெர்மன் நாட்டவரான Herbert Keller என்பவருக்கு சொந்தமானதாக இருந்ததாகவும், பின்னர் அது சுமார் 60 மில்லியன் ரூபாவுக்கு பசில் ராஜபக்சவால் கொள்வனவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிணைப் பணம் தொடர்பிலும் முன்னர் உத்தரவு

இவ்வழக்கில் பசில் ராஜபக்ச பல சந்தர்ப்பங்களில் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாத்தறை பிரதம நீதவான் சதுர திஸாநாயக்க, அவரது பிணைப் பணத்தைப் பறிமுதல் செய்வதற்கும், பிணையாளர்களிடமிருந்து உரிய பிணைத் தொகைகளை வசூலிப்பதற்கும் முன்னதாக உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், தற்போது குறித்த காணியை பயன்படுத்துவதைத் தற்காலிகமாகத் தடுப்பதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக FCID நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

எனினும், குறித்த காணியின் உரிமை மற்றும் கொள்வனவு தொடர்பான விடயங்கள் நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டுள்ள குற்றச்சாட்டுகளாகும். இது தொடர்பில் இறுதி நீதிமன்றத் தீர்ப்பு இதுவரை வழங்கப்படவில்லை.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1214787

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time