தங்க முலாம் பூசப்பட்ட T56 துப்பாக்கி வழக்கு; துமிந்த திஸாநாயக்க உள்ளிட்ட இருவருக்கு குற்றப்பத்திரம்.!!!
தங்க முலாம் பூசப்பட்ட T56 ரக துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மற்றும் பெண் ஒருவர் ஆகிய இருவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (10) உத்தியோகபூர்வமாக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரதிவாதிகள் இருவருக்கும் குற்றப்பத்திரங்கள் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளன.
குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க உள்ளிட்ட இரு பிரதிவாதிகளையும் பிணையில் விடுவிக்க மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தங்க முலாம் பூசப்பட்ட T56 ரக துப்பாக்கி மீட்கப்பட்டமை தொடர்பான இந்த வழக்கின் மேலதிக விசாரணைகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தொடர்ந்து இடம்பெறவுள்ளன.