உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

சாட்சியம் வழங்கிய பின்னர் கொழும்பு நீதிமன்றத்திலிருந்து வெளியேறிய கோத்தா.!!!

லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (29) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகி சாட்சியமளித்துள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையான கோட்டாபய ராஜபக்ஷ, இணையவழி தொழில்நுட்பத்தின் ஊடாக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்திற்கு தனது சாட்சியத்தை வழங்கியுள்ளார்.

சாட்சியமளித்த பின்னர் அவர் நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியேறியுள்ளார்.

இந்நிலையில், குறித்த வழக்கின் மேலதிக சாட்சிய விசாரணை எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லலித்–குகன் தொடர்பான வழக்கில் சாட்சியம் வழங்குவதற்காக இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்தது.

சம்பவத்தின் பின்னணி

கடந்த 2011ஆம் ஆண்டு மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10ஆம் திகதி யாழ்ப்பாண நகரில் நடத்த திட்டமிடப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டத்தை ஒழுங்கமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர், அதற்கு முந்தைய நாள் ஆவரங்கால் பகுதியில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, லலித் மற்றும் குகன் ஆகியோரின் உறவினர்களால் 2012ஆம் ஆண்டு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த மனு மீதான விசாரணையின்போது, சம்பவத்துடன் தொடர்புடைய சாட்சிகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்திற்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் 2012ஆம் ஆண்டு செப்டெம்பர் 19ஆம் திகதி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

குறித்த வழக்கு விசாரணைகளின்போது, 2017ஆம் ஆண்டு மனுவின் சாட்சியாளர்கள் பட்டியலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரும் இணைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215567

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time