உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

அரசாங்க ஊழியர்களுக்கு 2027 ஜனவரியில் மீண்டும் சம்பள அதிகரிப்பு.!!!

2027 ஜனவரி முதல் அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் அடிப்படைச் சம்பளம் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ அறிவிப்பு

அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் 2027 ஜனவரி மாதம் முதல் மேலும் ஒரு அடிப்படைச் சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சருமான வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், 2027ஆம் ஆண்டிலும் மேலும் ஒரு சம்பள அதிகரிப்பு வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நிலைமையை அரசாங்கம் பொறுப்பேற்றுக்கொண்ட போது அது சிறந்த நிலையில் காணப்படவில்லை எனவும், அதன் பின்னர் பொருளாதாரத்தை முறையாக முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் வருமானத்தில் இருந்து ஒரு பகுதி அரச அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசாங்க அதிகாரிகள் அல்லது ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் காணப்பட்டால், அவற்றை முன்வைத்து தீர்வு பெற்றுக்கொள்ளும் வகையில் சம்பள ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தில் எவ்வித அதிகரிப்பும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெளிவுபடுத்தியுள்ளார்.

அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் அளவுடன் தொடர்புடைய கொடுப்பனவின் பெறுமதி, எரிபொருளின் விலையை அடிப்படையாகக் கொண்டே நிர்ணயிக்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1067027

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time