ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் எம்.பியாக ஹபீப் றிபான் சத்தியப்பிரமாணம்.!!!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக சட்டத்தரணி ஹபீப் றிபான் இன்று (24) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இன்று காலை பாராளுமன்ற சபை அமர்வுகள் ஆரம்பமானபோது, சபாநாயகர் முன்னிலையில் சட்டத்தரணி ஹபீப் றிபான் தனது சத்தியப்பிரமாணத்தை மேற்கொண்டார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்டு வந்த எம்.எஸ். அப்துல் வாஸித் அண்மையில் தனது பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே சட்டத்தரணி ஹபீப் றிபான் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஹபீப் றிபான் உத்தியோகபூர்வமாக தனது பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார்.