உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

அமெரிக்க விமானப்படை B-52 குண்டுவீச்சு விமானம் விபத்து: 8 பேர் உயிரிழப்பு.!!!

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸுக்கு வடக்கே அமைந்துள்ள எட்வர்ட்ஸ் விமானப்படை தளத்தில் அமெரிக்க விமானப்படைக்குச் சொந்தமான B-52 ஸ்ட்ராடோஃபோர்ட்ரஸ் (Stratofortress) ரக குண்டுவீச்சு விமானம் விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க நேரப்படி காலை 11.20 மணியளவில் எட்வர்ட்ஸ் விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே குறித்த விமானம் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த அவசரகால மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை முன்னெடுத்துள்ளனர். உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் மற்றும் விபத்திற்கான காரணம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

1950களிலிருந்து அமெரிக்க விமானப்படையில் சேவையில் உள்ள B-52 ஸ்ட்ராடோஃபோர்ட்ரஸ் ரக விமானம், நீண்ட தூர உத்திசார் குண்டுவீச்சு திறன் கொண்டதாகும். சுமார் 8,800 மைல்கள் வரை பயணித்து தாக்குதல் நடத்தக்கூடிய இந்த விமானம் அணு ஆயுதங்களையும் சுமந்து செல்லும் திறன் பெற்றதாகும்.

வியட்நாம் போர், வளைகுடாப் பகுதி மோதல்கள், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்கள் உள்ளிட்ட பல்வேறு இராணுவ நடவடிக்கைகளில் இந்த ரக விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215392

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time