உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

April 18, 2026

Hot News

Print
அமெரிக்கா – ஈரான் பதற்றம்: போர் பாதையா அல்லது சமாதான வாய்ப்பா.???
Print
காத்தான்குடி கடற்கரையில்: பொதுச் சொத்தையும், வாழ்வாதாரத்தையும் காக்கும் சமநிலை அவசியம்.!!!

Share :

கிளீன் ஸ்ரீலங்கா’ 2026 செயல்திட்டங்கள் குறித்து உயர்மட்ட மீளாய்வு கூட்டம் – ஜனாதிபதி தலைமையில்.!!!

‘கிளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான செயல்திட்டங்கள் மற்றும் கடந்த ஆண்டின் முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

‘கிளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் கீழ் 2026 ஆம் ஆண்டில் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள், மக்களுக்கு மிகவும் நெருக்கமான வகையில் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இது, வெறும் அரசாங்கத்தின் திட்டமாக மட்டும் மட்டுப்படுத்தப்படாமல், மக்களுக்கு மிகவும் நெருக்கமான செயற்திட்டங்கள் ஊடாக ‘கிளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தை மேலும் பிரபலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.

மேலும், கடந்த ஆண்டின் முன்னேற்றங்கள் இங்கு மீளாய்வு செய்யப்பட்டதுடன், எதிர்வரும் ஆண்டிற்கான இலக்குகளை அடைந்துகொள்வதற்காக சம்பந்தப்பட்ட தரப்பினரை எவ்வாறு ஒருங்கிணைத்துச் செயற்படுவது என்பது குறித்தும் அதிகாரிகள் இதன்போது தெளிவுபடுத்தினர்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, கிளீன் ஸ்ரீலங்கா செயலகத்தின் அழைப்பாளர், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரசல் அபோன்சு, மேலதிக செயலாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர ஆகியோருடன் கிளீன் ஸ்ரீலங்கா செயலணியின் உறுப்பினர்கள், கிளீன் ஸ்ரீலங்கா செயலகத்தின் உயர்மட்ட அதிகாரிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 765024

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time