மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நிரந்தர பணிப்பாளராக வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம் நியமனம்.!!!
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நிரந்தர பணிப்பாளராக வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.
சுகாதார அமைச்சினால் இன்று (02) திங்கட்கிழமை இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதத்தை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, சுகாதார அமைச்சில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கத்திடம் கையளித்துள்ளார்.
இதன்படி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நிரந்தர பணிப்பாளராக அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.