மட்டக்களப்பு கடலில் மீனவர்களின் வலையில் சிக்கிய 200 கிலோ கொப்பரா மீன்: ரூ.2 இலட்சத்து 52 ஆயிரத்திற்கு விற்பனை.!!!
மட்டக்களப்பு, கிரான்குளம் தர்மபுரம் கடற்கரைப் பகுதியில் மீனவர்களின் வலையில் சுமார் 200 கிலோகிராம் எடையுடைய பாரிய கொப்பரா மீன் ஒன்று சிக்கியுள்ளது.
நேற்று (01) ஞாயிற்றுக்கிழமை மாலை மீனவர்களின் வலையில் சிக்கிய குறித்த மீன், 2 இலட்சத்து 52 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சந்தைக்கு மீன்களின் வரத்து அதிகரித்துள்ளதால் கொப்பரா மீனின் விலை ஒரு கிலோகிராமுக்கு 2,500 ரூபாவிலிருந்து 1,400 ரூபாவாகக் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மீன்பிடி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான பாரிய மீன் ஒன்று வலையில் சிக்கியுள்ளமை மீனவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலம் குறித்த மீனைப் பிடித்த மீனவர்களுக்கு கணிசமான வருமானம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.