உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260628-WA0045
பற்றி எரியும் வர்த்தக நிலையங்களும்... முதலாளிமார்களின் அசட்டுப் போக்கும்.!!!
IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!

Share :

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு: வீட்டிற்கே தீ வைத்த கணவன் கைது.!!!

மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த கணவர் ஒருவர், தாம் வசித்து வந்த இருமாடி வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் மொரட்டுவ – எகொடஉயன பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எகொடஉயன, சாகர மாவத்தை பகுதியில் அமைந்துள்ள குறித்த வீட்டின் மேல் மாடியில் இருந்து புகை மற்றும் தீப்பிழம்புகள் எழுவதாக அவசர தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, தீயணைப்புப் பிரிவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

மூன்று தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தீயணைப்பு நடவடிக்கையால், ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்த தீ விபத்தில் வீட்டின் மேல் மாடியில் அமைந்திருந்த ஒரு அறையும், அதிலிருந்த வீட்டு உபயோகப் பொருட்களும் முற்றிலும் எரிந்து சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுத்த எகொடஉயன பொலிஸார், வீட்டிற்கு தீ வைத்ததாகக் கூறப்படும் கணவரை கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எகொடஉயன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 935972

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time