உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

இந்து சமுத்திர போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்த இந்தியாவின் முழுமையான ஆதரவு தேவை – ஜனாதிபதி.!!!

• இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சந்திப்பு.

இந்து சமுத்திர பிராந்தியத்தின் ஊடாக நடைபெறும் போதைப்பொருள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், போதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்கும் இந்தியாவின் முழுமையான ஆதரவை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (09) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் 38 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது, இலங்கை–இந்தியா இடையிலான பாதுகாப்பு, பொருளாதாரம், சமுத்திர பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிலவும் உறவுகளை பரஸ்பர நன்மை பயக்கும் வகையில் மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

போதைப்பொருள் ஒழிப்பில் இந்தியாவின் ஒத்துழைப்பு

இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்துவதற்காக தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள தேசியத் திட்டம் தொடர்பில் ஜனாதிபதி இந்திய பாதுகாப்பு அமைச்சருக்கு விளக்கமளித்தார்.

இந்து சமுத்திர பிராந்தியம் போதைப்பொருள் வர்த்தகத்தின் முக்கிய மையமாக மாறிவருவதால், போதைப்பொருள் கடத்தலை ஒழிக்கும் நடவடிக்கைகளுக்கு இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்பு அவசியம் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும், தற்போது இந்தியாவில் சிறையில் வைக்கப்பட்டுள்ள இலங்கை போதைப்பொருள் வர்த்தகர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கும் இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

03 புதிய ஒப்பந்தங்கள் பரிமாற்றம்

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் 03 புதிய ஒப்பந்தங்கள் இதன்போது பரிமாறிக் கொள்ளப்பட்டன.

அத்துடன், இணையவழி ஊடாக 03 பெய்லி பாலங்களும் திறந்து வைக்கப்பட்டன.

இச்சந்திப்பு இலங்கை–இந்தியா இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் முக்கியமான சந்திப்பாக அமைந்துள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215589

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time