உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

Print
அமெரிக்கா – ஈரான் பதற்றம்: போர் பாதையா அல்லது சமாதான வாய்ப்பா.???
Print
காத்தான்குடி கடற்கரையில்: பொதுச் சொத்தையும், வாழ்வாதாரத்தையும் காக்கும் சமநிலை அவசியம்.!!!

Share :

இந்தோனேசிய கடற்படைக் கப்பல் ‘KRI BIMA SUCI – 945’ இலங்கைக்கு வருகை.!!!

ASEAN Plus Cadet Sail (APCS) – 2026 திட்டத்தின் கீழ் இந்தோனேசிய கடற்படைக்குச் சொந்தமான ‘KRI BIMA SUCI – 945’ என்ற கடற்படைக் கப்பல் நல்லெண்ணப் பயணமாக இன்று (15) இலங்கையை வந்தடைந்தது.

இந்தோனேசிய கடற்படையைச் சேர்ந்த கேடட் அதிகாரிகளுடன் மேலும் 26 வெளிநாடுகளைச் சேர்ந்த கேடட் அதிகாரிகளும் இந்தக் கப்பலில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்தக் கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கிணங்க சிறப்பாக வரவேற்றனர்.

இலங்கைக்கு வந்துள்ள ‘KRI BIMA SUCI – 945’ கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் சுகெங் ஹரியாண்டோ (Sugeng Hariyanto) கடமையாற்றி வருகின்றார்.

இந்தக் கப்பல் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில், இலங்கை கடற்படைப் பயிற்சி அதிகாரிகள் மற்றும் கடற்படை வீரர்கள் கப்பலை ஆய்வு செய்வதிலும் பல்வேறு பயிற்சி நடவடிக்கைகளிலும் பங்கேற்கவுள்ளனர்.

மேலும், இரு நாடுகளின் கடற்படைகளுக்கிடையிலான நட்புறவை வலுப்படுத்தும் நோக்கில் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கப்பல் குழுவினர்கள் பங்கேற்கவுள்ளதுடன், தீவின் பல முக்கிய இடங்களையும் பார்வையிட திட்டமிட்டுள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 762574

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time